மத்திய புலனாய்வு துறையின் கூடுதல் இயக்குநராக செயல்பட்டு வந்த நாகேஷ்வர் ராவ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு துறையின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் மோதல் நேரிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குரிய விவாதப்பொருளாக உருவெடுத்தது. இதனையடுத்து மத்திய அரசு இதில் தலையிட்டு, அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானாவுக்கும் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பியது.
இதனையடுத்து இடைக்கால அதிகாரியாக நாகேஷ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஷ்வர் ராவ், தற்போது அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு பிரிவின் டைரக்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.