பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மூன்றாவது முறையாக சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசாரின் காவலில் உள்ளவர் திருநாவுக்கரசு. சின்னப்பம்பாளையம் கிராமத்தில் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மூன்றாவது முறையாக சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர்.
தேர்வு முடிவுகள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தில் ரகசியமாக வந்த சிபிசிஐடி போலீசார் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்தினர். மேலும் அந்த வீட்டின் வரைபடங்களை நிபுணர் குழுவை வைத்து வரைந்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post