கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தற்போது திறக்கும் தண்ணீரை அடுத்த 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா அகிய மாநிலங்களைச் சேர்ந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்திற்கு தேவைப்படும் தண்ணீர் மற்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவுகள் குறித்த விவரங்கள், கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பேசிய, காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார், காவிரியில் கடந்த ஜூலை 31க்கு பின் நீர் வரத்து நல்ல முறையில் உள்ளது என்றார். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது என்றும் அதிக நீர் கர்நாடக அணைகளுக்கு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், கர்நாடக அணைகளில் போதுமான நீர்அளவு உள்ளதாகவும், தற்போது கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அப்படியே, அடுத்த 4 நாட்களுக்கு திறக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். காவிரி நீர் ஒழுக்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறும் எனவும் கூறினார்.

Exit mobile version