தமிழக முதலமைச்சரின் தொடர்முயற்சியால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பங்கீடு குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழகத்திற்குச் சாதகமான ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்ட விவசாயிகள் பாதிக்காதவாறு தமிழகத்திற்கு நீர் திறக்க, காவிரி மேலாண்மை வாரியத்திடம் வலியுறுத்தியதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து காவிரி விவகாரத்தில் நல்ல முடிவை ஆணையம் எடுக்கும் என நம்புவதாகவும் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு ஜூன் மாதம் வரவேண்டிய 9 புள்ளி 19 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதம் வரவேண்டிய 31 புள்ளி 24 டி.எம்.சி நீரும் விரைவில் விடுவிக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post