ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் : ரூ.1093 கோடி ஒதுக்கீடு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப் பலன்களை வழங்குவதற்கு குறுகிய காலக்கடனாக 1093 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பணப் பலன்களை தமிழக அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது. 2018 மார்ச் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான பணப்பலன்களுக்காக ஆயிரத்து 93 கோடியை வழங்க அரசு முடிவு செய்து, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை உட்பட 8 போக்குவரத்து மண்டலங்களுக்கு நிதி பகிரப்பட்டுள்ளது. சென்னைக்கு 125 கோடியே 55 லட்சம் கோடியும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 63.38 கோடியும், விழுப்புரத்திற்கு 130.26 கோடியும், சேலத்திற்கு,123.63 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு 164.79 கோடியும், கும்பகோணத்திற்கு 219.80 கோடியும், மதுரைக்கு165.66 கோடியும், நெல்லைக்கு 99.93 கோடியும் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version