கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் வழக்குப்பதிவு: காவல் ஆணையர் எச்சரிக்கை

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூரை அடுத்த நரியங்காடு காவலர் குடியிருப்பில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இதுவரை 6 ஆயிரம் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறை சார்பில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தினார்.

Exit mobile version