உயர்மின் கோபுர திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

உயர்மின் கோபுர திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டீஸ்கர் மாநிலம், ராய்கரிலிருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூருக்கு 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கொண்டு வரும் பொருட்டு 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனிடையே விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைப்பதற்கு தடை கோரி பழனிசாமி என்பவர் உட்பட 11 விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அவற்றை தள்ளுபடி செய்தார்.தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்டதால் திட்டத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழகத்தில் அமைக்கப்படும் மின் கோபுரங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பப்படுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version