சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அடையாறு மேம்பாலத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 57 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களின் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல், சென்னை மெரினா கடற்கரை – ராதாகிருஷ்ணன் சாலையில் பைஸ் ரேஸில் ஈடுபட்ட 50 பேர் காவல்துறையிடம் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆங்கில புத்தாண்டையொட்டி பைக் ரேஸில் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.