பாஸ்டேக் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தபட்டுள்ளது. சுங்கச்சாவடிகள் அனைத்தும் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்படும் என்றும், அந்த முறைக்கான ரேடியோ அலைவரிசை அடையாள அட்டையை பெறாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி சென்னை தியாகராய நகரை சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி. எண்ணோ, ரகசிய குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று விதி உள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பாஸ்டேக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யும் மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post