தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர். இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை நாளை நீதிமன்றம் வழங்குகிறது.
இதனால், சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு, லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
Discussion about this post