நலிந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்நிலையில், சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.