நம் மக்களில் உயர்தரப்பினர் சொகுசாகப் பயணிக்க மகிழுந்தினையே அதிகம் நாடுவார்கள். தங்களுக்கு பிடித்த கார் வகைகளை விரும்பி வாங்குவதிலும் அவர்கள் முனைப்புக் காட்டுவார்கள். அப்படி கார் வாங்குபவர்கள் அதிகரித்து வருவதால் இந்த ஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை உயரும்..!
ஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை 59 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன முகவர்கள் சங்கம் கூட்டமைப்பானது நடத்திய ஆய்வில் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் வாகனங்களின் விற்பனையானது பத்து சதவீதம் அதிகரித்துள்ளது. அதே இது இந்த மாதத்தில் 12.28 இலட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கடந்த ஆண்டு 2022-ல் ஜூலையில் 11.35 லட்சமாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு விற்பனை 8.15 சதவீதமாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல, 94,000 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது 2022-ல் 54,000 ஆக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 74 சதவீதம் விற்பனை அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டுகளில்…!
ஜுலை மாதத்தில் பயணியர் வாகனம், 2.84 லட்சம் விற்பனையாகியுள்ளது. இது 2022ல் 2.73 லட்சமாக இருந்துள்ளது. அதாவது கடந்தாண்டினை ஒப்பிடும்போது இது 4 சதவீதம் வளர்ச்சியினை அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 17.70 லட்சம் வாகனங்கள் ஜூலையில் விற்பனையாகியுள்ளன, இது 2022 ஜூலையில் 16.16 லட்சம் ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் வாகன சங்க கூட்டமைப்பினர் நடத்திய ஆய்வில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 59.84 சதவீதமாக வாகன விற்பனை வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, உயர் வர்க்கம் என்று அழைக்கப்படும் முதலாளிகள், பணம்படைத்தவர்களிடம் இருந்த கார் வாங்கும் ஆசையானது, படிப்படியாக மத்திய பிரிவினருக்கும் பரவிவிட்டது. நடந்து போவதை இந்த சமுதாயம் குறைவாக பார்க்கும்படியான நிலையை உருவாக்கிவிட்டது. சாதாராண கடைக்குக் கூட காரில்தான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி கார் மோகம் கொண்டு இந்த தலைமுறையினர் இருக்கும் வரை காரின் உற்பத்தி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.
Discussion about this post