திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 10 வயது சிறுமி பலியானார்.
உடுமலைப்பேட்டை ஜோதி நகரை சேர்ந்த காசி என்பவர் தனது காரில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது தாராபுரம் சாலையில் கள்ளிவலசு என்ற கிராமத்தில் காட்டுப்பாட்டை இழந்த கார் பேருந்திற்காக நின்றிருந்த 5 பேர் மீது மோதியது. இதில் 10 வயது சிறுமி ஜனவர்சினி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்தில் தங்கம்மாள், ரேணுகா, ரேவதி, 3 வயது குழந்தை சாய் ஸ்ரீ ஆகியோர் படுகாயங்களுடன் துடித்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்க அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Discussion about this post