இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ,   5 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி  தோல்வியடைந்துள்ளது.  இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க  பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அணி வீரர்களை தேர்வு செய்வதில் இருவருக்கும் முழு அதிகாரம் தரப்பட்டுள்ளநிலையில் தோல்வியடைந்தது ஏன் என்று கேட்கப்படும் என தெரிகிறது.  3வது போட்டியில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகிறது.
 
Exit mobile version