டெல்லியில் 15 ஆண்டுகளை கடந்த 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், மற்றும் 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி-என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்களை, உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, ரத்து செய்துவிட்டதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி வாசிகள் பழைய வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post