ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22 ம்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இந்த போராட்டத்தின் போது ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளனர்.
Discussion about this post