இலவச திட்டங்களை குறைகூறுபவர்கள் தங்கள் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கேட்க மாட்டோம் என சொல்ல முடியுமா? என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு 12 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 211 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விமர்சனம் என்ற பெயரில், அரசின் திட்டங்களை அவமதிப்பதற்கும், வன்முறையை தூண்டும் வகையில் சினிமாவில் காட்சி அமைப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்தார். இலவச திட்டங்களை குறைகூறுபவர் தங்கள் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கேட்கமாட்டோம் என சொல்ல முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.