இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
காலியாக உள்ள இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக வேட்பாளர்களாக விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரண்டு தொகுதிகளிலும் 6 நாள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர்.
இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் 225 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 2,700 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் இரண்டு தொகுதிகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் வருகிற 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
Discussion about this post