கலிபோர்னியாவில் படகில் தீ விபத்து: 25 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கலிபோர்னியா மாகாணத்தின், சண்டாகுரூஸ் தீவில் 3 நாட்கள் ஆழ்கடல் நீச்சல் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 38 பேர் கொண்ட குழு ஒன்று சாண்டகுரூஸ் தீவுக்கு சென்றுள்ளது. கடந்த திங்களன்று படகை தீவில் நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமாகியுள்ள 9 பேரைத் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version