அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். சாக்ரோமாண்டோ பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதுவரை, பல்லாயிரம் ஏக்கரில் விளைந்து இருந்த மரங்கள் தீயில் நாசமான நிலையில், மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனினும், காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Discussion about this post