கேட்பரி டைரி மில்க்.. Die மில்க்கான கதை இது!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் அமிர்தமாகவே சாக்லேட் படைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விரும்பி சாப்பிடும் கேட்பரி சாக்லேட்டுகளில் பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக்லேட் என்ற ஒரு விஷயம் உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது என்றே கூறலாம். அனைத்து நாடுகளிலும் அனைவராலும் விரும்பப்படும் பொருளாகவே திகழ்வது கேட்பரி சாக்லேட். முதன்முதலில் `மெஸ்ஸோ அமெரிக்கா’வில் சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டாலும், டெய்ரி மில்க் சாக்லேட் உருவானது இங்கிலாந்தில்தான். 1905-ல் கேட்பரி டெய்ரி மில்க் அறிமுகம் ஆனாலும்,1824-ல் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் என்ற இடத்தில் ரிச்சர்ட் கேட்பரி என்பவர் சிறிய தெருக்கடையில் கேட்பரி சாக்லேட் விற்பனையை முதலில் தொடங்கினார். இந்த சாக்லேட்டின் சுவைக்கு கோடிக்கணக்கான மக்கள் அடிமை என்றே கூறும் நிலையில், இங்கிலாந்தில் விற்கப்படும் கேட்பரி சாக்லேட்டுகளில், லிஸ்டீரியோ எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா தொற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த அச்சத்தின் காரணமாகவே, இங்கிலாந்து முழுவதும் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கேட்பரி சாக்லேட்டுகளும், விற்கப்பட்ட சாக்லேட்டுகளும் திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும் என்றும், இந்த சாக்லேட் வாங்கியிருந்தாலும் சாப்பிடாமல் வாங்கிய இடத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேட்பரி நிறுவனத்தின் சில தயாரிப்புகள் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்ட நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரஞ்சி((crunchie)), டைம்((Daim)), ஃப்ளாக்((Flake)), டெய்ரி மில்க் பட்டன்ஸ் ((Dairy Milk Buttons)) மற்றும் டெய்ரி மில்க் சங்க்ஸ் ((Dairy Milk Chunks)) போன்ற தங்களது 6 தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தயாரிப்புகளை யார் வாங்கியிருந்தாலும் சாப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். லிஸ்டீரியாசிஸ் பாக்டீரியா ப்ளூ வைரசை ஒத்தது என்றும் எச்சரித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை உடனடியாக அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் தங்களது தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பது இங்கிலாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– பாலாஜி, செய்தியாளர்

Exit mobile version