முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு, தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதியுடன் தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிவடைய உள்ளதால், போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்தும், கோயில்கள் திறப்பு பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post