10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்குமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படுகிறது. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது.