ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டதற்காக, தெற்கு ரயில்வேக்கு 12.54 கோடி ரூபாயை தமிழக அரசு கட்டணமாக வழங்கியுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ரயில் மூலம் ஜோலார்ப்பேட்டையிலிருந்து 354 எம்.எல்.டி தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் , இதற்காக 12.54 கோடி ரூபாயை தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கட்டணமாக செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.