ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு இளைஞருக்கு அட்சயம் அறக்கட்டளையினர் அடைக்கலம் கொடுத்து, குணப்படுத்தி சொந்த ஊர் அனுப்பி வைத்தனர்.
ஓராண்டுக்கு முன் நேபாளம் நாட்டை சேர்ந்த சுமன் என்பவர் தனது குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி ரயில் மூலம் கேரளாவிற்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது அவர் தன்னுடன் வந்தவர்களை தவறவிட்டு, ஈரோட்டில் இறங்கியுள்ளார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அவர் அட்சயம் அறக்கட்டளை யாசகர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சுமார் 8 மாதத்திற்கு பின் குணம் அடைந்தநிலையில், அவர் குறித்த தகவலை அறிந்த அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சுமனின் உறவினரை வரவைத்து, மாவட்ட ஆட்சியர் கதிரவன் உதவியோடு ரயில் மூலம் நேபாள நாட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
Discussion about this post