2023 ம் ஆண்டிற்குள் 10 உலகளாவிய உயர் வளர்ச்சி தொழில்கள் உள்பட 5 ஆயிரம் தொழில்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மோப்பிரிபாளையத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள கொடீசியா தொழில் பூங்காவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அப்போது தமிழக அரசு சிறு தொழில் வளர்ச்சிக்கு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சிக்கு கொடீசியா ஆற்றி வரும் பணிகளை அவர் வெகுவாக பாராட்டினார்.
Discussion about this post