திடீர் பேருந்து நிறுத்தம்.. சென்னைவாசிகள் கொந்தளிப்பு!

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஓட்டுநர்கள் நடத்துனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கமான தொமுச வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாளை சென்னை முழுவதும் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் 500 ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேகே நகர் பணிமனை அண்ணா நகர் பாரிமனை உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் வரக்கூடிய பேருந்துகளை மீண்டும் இயக்காமல் திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை நிறுத்தி வருகிறது பேருந்து நிலையங்களில் அந்தந்த பணி மனைகளில் பேருந்துகளை நிறுத்திவிட்டு இயக்காமல் உள்ளனர் இதனால் அந்தந்த பேருந்து நிலையங்களில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வேலைக்கு செல்பவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விடியா திமுக ஆட்சியைக் கண்டித்து மக்கள் அனைவரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.

Exit mobile version