சென்னை புழலை அடுத்த செங்குன்றத்தில், அசாமிற்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள பர்மா தேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்குன்றம் வழியாக முதலமைச்சர் வருவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றம் காவல்துறையினர், வேகமாக சென்ற லாரியை ஒன்றை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது, வாகனத்தின் ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், லாரியை சோதனையிட்டனர். அப்போது, லாரியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தேக்கு மரக் கட்டைகளை அசாம் மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றதாக தெரிய வந்துள்ளது.