சென்னை பூந்தமல்லி அங்காள பரமேஸ்வரி கோயிலில் கொள்ளை

சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னீர்குப்பம் வெத்தலைதோட்டம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அக்கோயில் வழியாக சென்ற மக்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையில், கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த 5சவரன் தாலி மற்றும் உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபயை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், கோயில் அருகே வைக்கபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர்கள் கொள்ளையர்கள் நோட்டமிடுவதும், இருசக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகியுள்ளது. இதனை வைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version