”நான் எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேர்த்துல கரெக்டா வருவேன்” என்ற சினிமா வசனம் போன்றதுதான் நம் இந்திய பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் கதை. நிறைய நாட்கள் காயம் காரணமாக ஓய்விலே இருந்து தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
தற்போது இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே மூன்று டி20 போட்டிகள் நடக்கவிருக்கிறது. அதில் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக தலைமை தாங்குகிறார். முதுகுவலி பிரச்சினை காரணமாக நியூசிலாந்தில் சிகிச்சைப் பெற்று வந்த பும்ரா, உடற்தகுதிச் சோதனையில் தேறி வந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் ப்ரசித் கிருஷ்ணாவும் அணிக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்துடன் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்தார். தற்போது இவரும் திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் மகிழ்ச்சி. பும்ரா கேப்டன் ஆனது போல, ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக விளையாட உள்ளார். ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
அணியின் விபரம் பின்வருமாறு உள்ளது…
ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் (து.கேப்டன்), ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், ஷபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், ப்ரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.
Discussion about this post