கால்நடை திருவிழாவில் பங்கேற்ற காளைகள்

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கால்நடை திருவிழாவில் பங்கேற்ற காளைகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.

பொள்ளாச்சி அடுத்த சமத்தூரில் கொங்குநாடு கால்நடைத் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் காங்கேயம் காளைகள், காங்கேயம் இன பூச்சி காளைகள், செவளை, காரி, மயிலை என பல்வேறு இன காளை மாடுகள் கலந்து கொண்டன. இதேபோல் எருமை மாடுகளும், ராஜபாளையம், சிற்பி, கோம்பை, கன்னி, மந்தை, ஆகிய வகைகளை சேர்ந்த நாட்டு நாய்களும் கண்காட்சியில் பங்கேற்றன. இறுதியாக காங்கேயம் இன காளைகளின் உடல் தகுதி, வயது, பல், திமில், மற்றும் கொம்பு ஆகிய காரணிகள் அடிப்படையில் சிறந்த காளை தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு புல்லட் பைக் வழங்கி கவுரவித்தனர். இதேபோல் சிறந்த ஜோடி காளைகளை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளர்களுக்கும் ரேக்ளா வண்டி வழங்கினர்.

Exit mobile version