ராமநாதபுரம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டி அடக்கிய நிகழ்வு பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ணன் கோயில் கோகுலாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 120க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுக் காளைகளை விரட்டிப் பிடித்தனர். காளைகள் சுழன்று வீரர்களை விரட்டிய காட்சியும், விரட்டிய காளைகளைத் துரத்தி பிடித்த காளையர்களின் வீரமும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. அடங்காமல் திமிறிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Discussion about this post