2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
2020 – 21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, 11ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மீண்டும் பாஜக அரசு அமைந்த பின்னர், நிதியமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் மீதமுள்ள நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அந்த வகையில், முதல் முறையாக நிர்மலா சீதாராமன் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வருமான வரிச்சலுகை, ஜி.எஸ்.டி வரி குறைப்பு, வீட்டு வசதி திட்டத்துக்கான வரிச் சலுகைகள், நுகர்வோர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு நிர்மலா சீதாராமன் வருகை புரிந்தார்,