நிலம் எங்கள் உரிமை! திமுகவினை எதிர்த்து போராடும் சென்னையின் பூர்வக்குடிகள்!

திமுக ஆட்சி என்றாலே ஏழைகளுக்கு எதிரான ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும்…. அந்த அளவிற்கு தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர்…. பக்கிங்காம் கால்வாய் பகுதியில் குடியிருக்கும் மக்களை விரட்டி அடிக்கும் முயற்சியில் திமுகவினர் இறங்கியுள்ளனர்… அது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திமுக ஆட்சி நடத்திய எல்லா காலத்திலும் பூர்வ குடிமக்களை விரட்டியடிப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கின்றது…. கருணாநிதியின் ஆட்சில காலத்தில் மீனவர்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, சென்னையில் மூலையில் கொண்டுபோய் அவர்களை குடியமர்த்தினர்… தற்போது அவர் மகன் ஸ்டாலின் அந்த வேலையை செய்து வருகின்றார்.

பட்டினப்பாக்கம் உட்பட மீன் வியாபாரம் நடக்கும் இடங்களை ஸ்டாலின் தலைமையிலான அரசு வஞ்சகமாக ஆக்கிரமித்து பெரு முதலாளிகள் வாக்கிங் செல்ல ஏதுவாக மாற்ற நினைத்தது. இன்று வரை அந்த பிரச்னை முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்தான் சென்னை சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்களை விரட்டியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது திமுக.

இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகாலமாக இங்கு வசித்து வருகின்றனர்…. ஒரு காலத்தில் திமுக அரசு வீடு கொடுப்பதாக நம்ப வைக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்டவர்கள்தான் இங்கு பெரும்பாலும் வசித்து வருகின்றனர்… அரசை நம்பி ஏமாந்த நிலையில் குடிசை வீடு கட்டியும், சொந்த செலவில் கான்கீரிட் வீடுகள் கட்டியும் வாழ்ந்து வந்த நிலையில்தான் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது….. பக்கிங்காம் கால்வாயை சீரமைக்கப்போகிறோம் என நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆகிய துறைகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

பல்லாண்டுகளாக வசித்து வரும் அப்பகுதி மக்களை அகற்ற, வழக்கம்போல கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது அரசு. அம் மக்களோ, எங்களின் வாழ்வாதாரமே இங்குதான் உள்ளது, தொழில் செய்வது, பணி செய்வது, குழந்தைகளுக்கான பள்ளி, கல்லூரிகள் எல்லாமே இங்குதான் இருக்கின்றன திடீரென்று இங்கிருந்து கிளம்படி சொன்னால் என்ன செய்வது என கெஞ்சியுள்ளனர்…. அங்கிருக்கும் திமுக வட்டச்செயலாளர்களோ, தங்களின் தலைவர் சொன்னபடி ஏரியா மக்களை வெளியல் அனுப்பி வைப்பதில் குறியாக உள்ளனர்.

சென்னையின் பூர்வ குடி மக்கள் வசிக்கும் பல பகுதிகளை அவர்களிடம் இருந்து பிடுங்கி, தரமில்லாத குடியிருப்பு வாரிய கட்டடங்களில் அவர்களை அமர்த்துவதில் திமுக கை தேர்ந்தது. இடத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்த அம்மக்களோ, தாங்கள் உருவாக்கிய சென்னையிலேயே உரிமையை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..

Exit mobile version