இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வந்து, தற்காலத்தில் பெருத்த பின்னடவை அடைந்திருக்கும் நிறுவனமே பி.எஸ்.என்.எல். பாமர மக்கள் அன்றைய காலக்கட்டத்தில் மலிவு விலையில் சிம் கார்டுகளை பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே இது ஆகும். டெலிகாம் சேவையில் அடைந்த பின்னடைவின் காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் வீழ்ச்சியை சந்தித்த பி.எஸ்.என்.எல், தற்போது மீண்டும் புதிய வேகத்துடன் இயங்குவதற்கு ஆய்த்தமாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் அடைந்த வீழ்ச்சியை சரிகட்டும் விதமாக மத்திய அரசு 89,047 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. ஜியோ போன்ற தனியார் நிறுவனங்கள் வளர்ந்துவிட்ட பிறகு இணையத் துறையில் அடிவாங்கிய பி.எஸ்.என்.எல் 4ஜி மற்றும் 5ஜி சேவையினை வழங்கும் விதமாக செயல்பட ஆயத்தமாகியுள்ளது. மேலும் பி.எஸ்.என்.எல்லில் வேலை செய்த ஊழியர்கள் விருப்ப ஓய்வுப் பெற்று வீடுதிரும்பினார்கள். சிலர் வேலையை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்த நிலை மாறும் என்று மத்திய அரசு நம்பிக்கை அளித்துள்ளது.
Discussion about this post