ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது நினைவு நாளையொட்டி, அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் மரியாதை செலுத்தினார்.
பிரிட்டன் அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு உதாரணம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இந்த படுகொலை தாக்குதல் நடந்து 100 ஆண்டுகளாகும் நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ் – இந்தியா வரலாற்றில் அழியா வடு என வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், படுகொலையின் 100-வது நினைவு நாளையொட்டி, அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் டோமினிக் ஆஸ்குய்த் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.