சென்னை அரும்பாக்கம் பகுதியில் நின்றிருந்த பள்ளி பேருந்தில் ஆண் நண்பர்களுடன் இரவு முழுவதும் தங்கி விடிய விடிய கும்மாளம் அடித்த ஆண் வேடமிட்ட சிறுமி போலீஸாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடிந்தும் விடியாத காலைப்பொழுது…. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப்பேருந்தில் இருந்து 4 பேர் தலை தெறிக்க இறங்கி ஓடினர். இதை பார்த்த காவலாளி அவர்களை விரட்டி பிடிக்க முற்பட்டார். அப்போது 3 பேர் காற்றை போல அகப்படாமல் கை நழுவ, ஒருவர் மட்டும் ஓட முடியாமல் சிக்கி கொண்டார்.
கையும் களவுமாக சிக்கிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு விசித்திர உண்மை வெளிவந்தது. பட்டன் வைத்த சட்டை, பாக்ஸ் ஹேர் கட், ஜீன்ஸ் சாட்ஸ் சகிதம் தங்கள் முன் நிற்பது ஆண் அல்ல,16 வயது சிறுமி என்பதை அறிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சியில் இருந்து ஓடி வந்து திசைமாறிய இந்த விட்டில் பூச்சி, ஆண் நண்பர்களுடன் இன்புற்றிருக்க, தேர்ந்தெடுத்த வேடம் தான் குறுக தரித்த தலையும், குட்டை ட்ரவுஸரும். ஒர்ஜினல் ஆண்களையே ஓவர் டேக் செய்யும் வகையில் உடையும் ஒப்பனையும் செய்து கொண்டு இரவில் நண்பர்களுடன் நகர் வலம் வருவது இந்த சிறுமியின் வாடிக்கை.
3 ஆண் நண்பர்களுடன் சாலையில் சுற்றித்திறிந்த இந்த போதை வண்டு, ரோந்து பணி போலீஸாரிடம் சிக்கியுள்ளது. ஆனால் குரூப்பில் இருக்கும் டூப்பை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. 4 பேரையும் ஆண் என நம்பி அவர்களது இரு சக்கர வாகனத்தை வாங்கி வைத்து மறுநாள் பெற்றோருடன் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து நடந்து சென்ற நால்வரும், தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் நுழைந்து, பள்ளிப் பேருந்திற்குள் விடிய விடிய கும்மாளம் அடித்து விட்டு அப்படியே தூங்கியுள்ளனர். விடியும் வேளையில் தான் போதை தெளிந்துள்ளது. அதன் பிறகு நடந்துதான் தொடக்கத்தில் சொன்ன அந்த செக்கியூரிட்டி சேஸிங் சீன்.
ஆண் வேடதாரியின் கதை முழுவதையும் கேட்ட போலீஸார், திருச்சியில் உள்ள அவரது தந்தையை சென்னை வரவழைத்து சிறுமியை அனுப்பி வைத்தனர். ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க ஆண் வேடம் தரித்த 16 வயது சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிபதிவாளர் யோகேஷ் உடன் செய்தியாளர் கதிரவன்