லடாக் எல்லையில் சீன ராணுவம் படைகளை குவித்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கடந்த 5ம் தேதி லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் லடாக் எல்லையில் சீனா ஐந்தாயிரம் வீரர்களை குவித்தது. இதன் காரணமாக, இந்தியாவும் ராணுவம் அப்பகுதியில் வீரர்களை குவித்துள்ளது. எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மேலும், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவுடன் பிரதமர் மோடி தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.
Discussion about this post