கொரோனா வைரசை பற்றி முன்பே புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதா ?

தற்போது உலகையே உலுக்கிவரும் கோவிட் 19 அல்லது  கொரோனா வைரஸ் குறித்து, பல ஆண்டுகள் முன்பே இரண்டு நூல்கள் கணித்து உள்ளன – என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
 
கோவிட் 19 என்று தற்போதும் கொரோனா என்று முன்னரும் அழைக்கப்பட்ட வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 25க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் 1500யை தாண்டி உள்ளது. எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் பரவியதாக சீன அரசு கூறி வந்தாலும், பல ஆண்டுகள் முன்பாகவே இது போன்ற ஒரு சூழல் உருவாகும் – என்ற கணிப்பை இரண்டு நூல்கள் வெளிப்படுத்தி உள்ள செய்தி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
 
கடந்த 1981ஆம் ஆண்டில், டீன் கோண்ட்ஸ் என்பவர் எழுதிய ‘தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ்’ – என்ற நூலின் கதையின் படி, சீன இராணுவம் ஒரு வைரஸ்சை உயிரி ஆயுதமாக உருவாக்குகின்றது. அந்த வைரஸ்சால் மனிதர்களை மட்டுமே பாதிக்க முடியும், மனித உடல் இல்லை என்றால் அடுத்த நாளே அந்த வைரஸ் இறந்துவிடும். இதனால் புதிய வைரஸ்சை சீனா ஒரு சிறந்த ஆயுதமாகக் கருதுகின்றது. இந்த வைரஸ் ஆயுதம் சீனாவின் வுகான் நகரில் பாதுகாக்கப்படுவதால், வைரஸ் வுகான் 400 – என்றே அழைக்கப்படுகின்றது.
 
இந்தக் கதை ஒரு கற்பனைக் கதை என்றே கூறப்பட்டு இருந்தாலும், சீனாவின் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவியபோது, இந்தக் கதையில் கூறப்பட்டது அப்படியே உண்மையோ? – என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது.
 
கொரோனாவைக் கணித்த மற்றொரு நூலாக, ’சில்வியா பிரவுன்’ என்பவர் 2008ஆம் ஆண்டில் எழுதிய ’எண்ட் ஆஃப் டேஸ்’ – என்ற நூலும் கூறப்படுகின்றது. அந்நூலில் வைரஸ் குறித்து எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை என்றாலும், 2020ஆம் ஆண்டில் உலகெங்கும் ஒருவித நிமோனியா நோய் பரவும் என்றும், இந்த நோய் நுரையீரலை பாதிக்கும் என்றும் மேலும் அதுவரை அறியப்பட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் இந்த நோய் கட்டுப்படாது – என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மூன்றும் தற்போது நடந்து வருகின்றது.
 
இப்படியாக இந்த இரண்டு நூல்களில் ஏற்கனவே கொரோனா தாக்கம் பற்றி, வெவ்வேறு வகைகளில் கூறப்பட்டு உள்ளதால், கொரோனா நோய் குறித்த சீன அரசின் விளக்கங்கங்கள் அனைத்தும் உலக அரங்கில் கேள்விகளுக்கு உள்ளாகி வருகின்றன.

Exit mobile version