கடலூரில் என்.எல்.சி நிறுவன ஆக்கிரமிப்பு நிலங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அதற்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் வேலைவாய்ப்பு அமைத்துத் தருதல் போன்றவற்றை சரிவர மேற்கொள்ளாததால் நாட்டின் 74வது குடியரசு தினத்தினை புறக்கணித்து தேசியக் கொடிக்கு பதிலாக தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியினைக் கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிறுவனம் அமைக்கப்பட்டபோது கையகப்படுத்தப் பட்ட நிலங்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது கையகப்படுத்தும் நிலங்களுக்கு 25 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. 2000 வருடத்தில் 6 லட்சம் கொடுத்து கிராம மக்களிடையே கையகப் படுத்திய நிலங்கள் இன்னும் பயன்பாட்டில் இல்லாமல் தரிசு நிலமாகவே இருந்து வருகிறது. எனவே அந்த நிலத்தினை நிறுவனத்திற்கு வழங்கிய மக்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை, குறிப்பாக சமகால இழப்பீட்டினை முறைப்படி வழங்குமாறு இத்தகைய நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post