இந்துக்களுக்கு எதிராக பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக இளைஞர் அணி சார்பில் சாரம் அவ்வை திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்துக்களுக்கு எதிராக பேசிய கமல்ஹாசனை கைது செய்து அவரது கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.