பாஜகவினருக்கு சகிப்புத் தன்மை கிடையாது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றினை செல்லூர் ராஜூ அவர்கள் கொடுத்திருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். தமிழ் மக்களுக்காக வாழ்ந்த, அவர்களுக்காக பல நலத் திட்டங்களைக் கொண்டு வந்த புரட்சித் தலைவி போல உலகில் யாரும் கிடையாது. தானும் அவரைப் போல தான் என்று உரிமைக் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. புரட்சித் தலைவி ஒருவர் மட்டுமே தான் வேறுயாருமில்லை என்று அவர் பேசினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவரின் உருவப்படத்தினை பாஜகவினர் எரித்த விசயத்தினைப் பற்றி பேசும்போது, பாஜகவினருக்கு சகிப்புத் தன்மையில்லை என்றார். மேலும் அதிமுகவில் இருந்து பாஜகவில் சிலர் இணைந்தபோது இனித்தது, ஆனால் பாஜகவிலிருந்து அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? என்றும் கேள்வியெழுப்பினார்.

Exit mobile version