மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத்பவார் தனது குடும்பத்தில் இரண்டு பேர் தேர்தலில் போட்டியிடுவதால் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என அவர் தெரிவித்தார்.
ஆனால் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு பாரதிய ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என்று சரத்பவார் குறிப்பிட்டார். கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.