மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கும் பாஜக

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை இன்று துவங்கவுள்ளார்.மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளதையடுத்து, நாட்டின் பல மாநிலங்களில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.

பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த 19ம் தேதி நடத்தப்பட்ட பேரணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 24 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 23ம் தேதி மால்டாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் துர்காபூர் பகுதிகளில் இன்று பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்கிறார்.

மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

Exit mobile version