பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மக்களவை தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் வி.எம்.ஆர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தின. இதில், மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியே அமையும் என்று தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 135 இடங்களையும், பிற கட்சிகள் 125 இடங்களையும் பெறும் என்றும் கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Exit mobile version