மக்களவை தேர்தலை சந்திக்க தயாராகும் பா.ஜ.க

மக்களவை தேர்தலை எதிர்க்கொள்ளும் விதமாக மேலும் புதிதாக மூன்று குழுக்களை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றன. இந்தநிலையில் புதிதாக மூன்று குழுக்களை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார். குறிப்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 20 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பர குழுவுக்கு தலைவராக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மக்களவை தேர்தல் எதிர்க்கொள்ள பா.ஜ.க அமைத்திருக்கும் குழுக்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version