மத்தியபிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உற்சாகமாக பாடிய வீடியோ வெளியானது!

மத்திய பிரதேச மாநிலத்தில் தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் உற்சாகமாக பாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் குறைந்துள்ளதால், அங்கு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குதிரை பேரத்தில் இருந்து காப்பாற்ற பாரதிய ஜனதா எம்எல்ஏகள் அனைவரும் வேறு மாநிலத்திற்கு அனுப்பப்படுகின்றனர். போபாலில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு சென்ற பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் ஆடல் பாடலுடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version