பாஜக நிர்வாகிகள் எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!

மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் அவரது இல்லத்தில் முன்னாள் பாஜக ஐடி பிரிவு மாநிலத்தலைவரும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவருமான நிர்மல்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப், OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

Exit mobile version