தங்கக்கடத்தல் விவகாரம்: கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்!

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் ஜலீல் பதவி விலக வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட 30 கிலோ கடத்தல் தங்கம், கடந்த ஜூலை 5ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் அரசுத்துறை அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இந்த இவ்விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் ஜலீல் பதவி விலக வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடிக்க முயற்சித்தனர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Exit mobile version