மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி அளித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜக அனுமதி கேட்டு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தது. ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் மதக் கலவரம் உருவாகும் நிலை ஏற்படும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து மாநில பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஜக ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.